ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நாளைய தினம் தீர்க்கமான பேச்சுவார்த்தை

202 0

நாளைய தினம் மாலை வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் பிரதி நிதிகளுடன் தீர்க்கமான பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

 

ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களின் வேலை நிறுத்தத்திற்கான பிரச்சனையை கேட்டறிந்தார். இந்த விடயத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கவனத்திற்கு கொண்டு வருவதாக அவர்களிடம் தெரிவித்தார்.

தான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் இந்த பிரச்சினைக்கு முற்றுமுலுதான தீர்வை காணுவதாகவும் உறுதியளித்தார். இதனால் ரயில் பிரயாணிகளின் போக்குவரத்து பிரச்சினையை கவனத்திற் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு நாளை இரண்டு மணிமுதல் ஐந்து மணிவரை மூன்று கட்டங்களாக தொழிற் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தை நடத்தயிருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

பிரயாணிகளின் நலன் கருதி மேலதிக பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் ரயில் சாரதிகள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் மேலதிக வேலை நேரத்திற்காக நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதாகவும் கூறினார்.

இதேவேளை ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தத்தினால் 300 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. காங்கேசன்துறை ,மட்டகளப்பு , பதுளை ஆகிய இடங்களுக்கான இரவு தபால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதினால் மத்திய தபால் பரிவர்தன நிலையத்தில் தேங்கியிருக்கும் தபால் பொதிகளை வாகனங்களில் எடுத்து செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால்திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.