சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது

204 0

மீகொட பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகொட பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இன்று அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுக்க – வட்டருக்க பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 800 லீட்டர் சட்டவிரோத மதுபானம், சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 2 ஆயிரத்து 304 கோடாக்கள் , 2 எரிவாயு சிலிண்டர்கள் , எரிவாயு அடுப்பு ,செப்பு தகரம் , தண்ணீர் மோட்டார் , சீனி 50 கிலோ கிராம் மற்றும் கருப்பட்டி 5 கிலோ கிராம் உள்ளிட்ட பெருமளவான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.