புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேசத்தின் பள்ளிவாசல்பாடு கிராமத்தில் இறந்த நிலையில் டொல்பினொன்று கரை ஒதுங்கியுள்ளது.
பள்ளிவாசல்பாடு பகுதியில் உள்ள கடற்கரைக்கு நேற்று (செவ்வாய்கிழமை) சென்ற மீனவர் ஒருவர் டொல்பினொன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளார்.
அதன் பின்னர் அதனை இழுத்து கரையில் சேர்த்துள்ளார். சுமார் 06 அடி நீளமுடைய டொல்பின் ஒன்றே பல காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
கரை ஒதுங்கியுள்ள டொல்பினை பார்வையிடுவதற்காக அதிகளவிலான மக்கள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

