கண்டி எசல பெரேஹராவில் கலந்து கொண்ட ‘டிகிரி’ என்ற 70 வயதுடைய யானை உயிரிழந்தது

317 0

கண்டி எசல பெரேஹராவில் கலந்து கொண்ட ‘டிகிரி’ என்ற 70 வயதுடைய யானை உயிரிழந்துள்ளது.

குறித்த யானையானது நேற்றுமுன்தினம் கேகாலை ரந்தெனிய பகுதியில் வைத்து உயிரிழந்துள்ளதாக அதன் பாகன் தெரிவித்துள்ளார்.

டிகிரி யானைக்கு தற்போது 70 வயது, இது பார்ப்பதற்கு நோயால் பாதிக்கப்பட்டது போலவும் , உடல் மெலிந்த நிலையிலும் ,சோர்வுற்ற நிலையிலும் , மிகவும் பரிதாபமான நிலையில் காணப்படுகின்றமையால் இந்த யானையை ஊர்வலத்தில் பயன்படுத்தியமை குறித்து பலரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.