
கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய கடற்படையில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் யோஷித ராஜபக்ஷ பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷவை மீண்டும் இணைத்துக்கொள்ளும் அனுமதி கடிதத்தில் நேற்றைய தினம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

