சஜித் இல்லாவிட்டால் அரசியலில் ஈடுபட்டு பயனில்லை- நலீன் பண்டார

291 0
ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள தகுதியான மற்றும் சிறந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என பிரதி அமைச்சர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்ததாவிட்டால் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பயனில்லை எனவும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் எப்படியாவது வெற்றிப்பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழுவின் பெரும்பாலானோருக்கும் பாராளுமன்ற குழுவின் பெரும்பாலானோருக்கும் வெற்றியே தேவையாக உள்ளதாகவும், இறுதி நேரத்திலாவது ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் நலீன் பண்டார தெரிவித்திருந்தார்.