காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் நாளை கொந்தழிப்பாக காணப்படும் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனவே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினரையும் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தென்மேற்கு திசையில் நிலவும் மழையுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை, நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

