3 தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. – தி.மு.க. வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல்

285 0

201610271149329489_3-constituency-election-aiadmk-dmk-candidates-nomination_secvpfஅரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நாளை தாக்கல் செய்கிறார்கள்.அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க. – தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. பா.ஜனதா, வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கிறது.

3 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யவில்லை.3 தொகுதிகளிலும் அ.தி. மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல் செய்கிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகியோர் நாளை அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சைபுதீனிடம் மனுதாக்கல் செய்கிறார்கள்.தஞ்சை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி, தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம் பூபதி நாளை தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுரேசிடம் தங்களது மனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நாளை அத்தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் தேர்தல் அலுவலர் லீலாவிடம் மனுதாக்கல் செய்கிறார்கள்.

இரு கட்சி வேட்பாளர்களும் மதியம் 1 மணியில் இருந்து 3 மணிக்குள் மனுவை தாக்கல் செய்கிறார்கள்.ஒரே நாளில் இரு முக்கிய கட்சிகளும் மனுதாக்கல் செய்வதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

வருகிற 2-ந்தேதியுடன் மனுதாக்கல் முடிவடைகிறது. 3-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 5-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். வேட்பாளர் இறுதி பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும். 19-ந்தேதி ஓட் டுப்பதிவு நடைபெறும். 22-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.