வவுனியாவில் தேக்கம் மரங்கள் அழிப்பு

178 0

விடுதலைப்புலிகளால் நாட்டப்பட்ட தேக்கம் மரங்கள் வன இலகாவினரால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் நாட்டப்பட்ட பயன் தரும் பல தேக்கம் மரங்கள்  வன இலகா திணைக்களத்தினால்  தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று  பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் பாரியைத் தேக்கம் காட்டிற்குள் சென்ற வன இலகா திணைக்கள உத்தியோகஸ்தர்கள் தேக்க மரங்களைத் தறித்து வருகின்றனர்.

பன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் நாட்டப்பட்டு பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த பயன் தரும் பல தேக்கம் மரங்களே இவ்வாறு  அங்கிருந்து வன இலகா திணைக்களத்தினால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதையடுத்து அப்பகுதியில் ஒன்றிணைந்த பொதுமக்கள் வன இலகாவினரிடம் இது குறித்துக் கேட்டபோது, வன இலகா திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதியிலுள்ள தேக்கம் மரங்களே இவ்வாறு தறிக்கப்பட்டு வருகின்றன.

பெரிய மரங்கள் தறிக்கப்பட்டு புதிய மரங்கள் நாட்டுவதற்காகவே பழைய மரங்கள் இவ்வாறு தறிக்கப்பட்டு வருவதாக அங்குச் சென்ற வன இலாகா திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.