தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்­று­கி­றது – அங்கஜன்

255 0

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கு­வ­தற்கு தான் முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் அதனை வழங்க விடாமல் தடுப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சிலரால் சதித்­திட்டம் தீட்­டப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். எனினும் இது வரையில் இருந்த ஆட்­சி­யா­ளர்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­களின் பெரும்­பா­லான கோரிக்­கை­களை நிறை­வேற்­றி­யுள்ளார் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இரா­ம­நாதன் தெரி­வித்தார்.

சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரி­விக்­கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வடக்கு மற்றும் கிழக்கில் முப்­ப­டை­யினர் வச­மி­ருந்த 21, 073 ஏக்கர் அரச காணி­களும், 19, 889 தனியார் காணி­களும் விடு­விக்­கப்­பட்­டன. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் இவ்­வ­ருடம் வரையில் 42, 207 அரச காணி­களும், 5958 ஏக்கர் தனியார் காணி­களும் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது 551 ஏக்கர் அரச காணி­களும், 324 ஏக்கர் தனியார் காணிகள் மாத்­தி­ரமே விடு­விப்­ப­தற்கு எஞ்­சி­யுள்­ளன.

இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து கொண்டு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இன்­னமும் மக்­களை ஏமாற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.எனவே இவ்­வாறு தொடர்ந்தும் ஏமா­றாமல் தமக்கு உரிய தீர்வை வழங்கக் கூடிய, வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றக் கூடிய ஒரு­வரை அடுத்த ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது. அதனை அவர் கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.