தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் எதிரிகளுக்கு பகிரங்க பிரயாணை

321 0

tna-tnn01-300x1302தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பரப்புரைகளுக்காக ஊர்காவற்றுறை சென்ற வேளை இடைமறித்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கின் முதல் இரண்டு எதிரிகளுக்கும் பகிரங்க பிடியடிணை உத்தரவினை பிறப்பதித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இப்பிடியாணை உத்தரவினை நிறைவேற்ற சர்வதேச பொலிஸாரின் உதவியினை நாடுமாறும் பொலிஸ்மா அதிபருக்கு பணித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஊர்காவல்துறையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊர்காவற்றுறைக்க செல்வதற்கு முன்பே அவர்களுடைய வாகனங்களை இடைமறித்தவர்கள் வாகனங்கள் மீதும், அதில் பயணித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனையானது திருகோணமலை மேல்.நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்திருந்த நிலையில் சடமா அதிபரின் பணிப்பின் பேரில் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்க நேற்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்படி நேற்றைய வழக்கு விசாரனையில் மூன்றாம் நான்காம் எதிரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் முதலாம் இரண்டாம் எதிரிகள் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனையடுத்து குறித்த முதலாம் இரண்டாம் எதிரிகளுக்கு பகிரங்க பிடியானை பிறப்பிக்கவும் அதனை சரவதேச பொலிஸார் ஊடாக நிறைவேற்றவும் பொலிஸ்மா அதிபருக்கு யீழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் 5ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலங்களை கொண்ட வழக்கு விசாரனைகளுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றை தொடர்ச்சியான வழக்கு விசாரனையூடாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற பிரதம நீதியரசரது சுற்றிக்கையை மேற்கோள்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் குறித்த வழக்கு விசாரனையும் தொடர்ச்சியான வழக்கு விசாரனைகளாக நடாத்தவும் உத்தரவிட்டிருந்தார்.
இதன்பதி இவ் வழக்கின் 1-40வரையான சாட்சிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதியில் இருந்து முறையே 1-4 சாட்சிகள் 21ஆம் திகதியும் 5-8 சாட்சிகள் 22ஆம் திகதியும் 9-12 சாட்சிள் 23ஆம் திகதியும் 13-14சாட்சிகள் 24ஆம் திகதியும் 15-18வரையான சாட்சிகள் 25ஆம் திகதியும் 19-23வரையான சாட்சிகள் 29ஆம் திகதியும் 24-28 சாட்சிகள் 30ஆம் திகதியும் 29-33 சாட்சிகள் 1ஆம் திகதியும் மற்றைய எனைய சாட்சிகள் 2ஆம் திகதியும் மன்றுக்கு முன்னிலையாக வேண்டும் எனவும் இதன்படி வழக்கு விசாரனையானது குறித்த தினத்தில் இருந்து தொடர்ச்சியாக பிற்பகல் 1.30மணிக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தற்போது பிணையிலுள்ள 3ஆம் 4ஆம் எதிரிகளை தொடர்சியாக முன்னர் இருந்த பிணையிலே இருக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.