தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் ஒருவரை அன்றி வேறு எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தயாராக எல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், தற்போது இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அதில் ஒருவர் கோட்டாபய ராஜபக்ஸ. அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாமா? இல்லையா? என்பது தொடர்பில் தற்போதும் நிச்சயமற்ற நிலை உள்ளது.
நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டமானது, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளரை வெற்றிப் பெறச் செய்வதை நோக்காக கொண்டு ஒருவரிடம் பேசுவதை தவிர, அவரை நீக்கி வேறு ஒருவரை வெற்றிப் பெறச் செய்வது தொடர்பில் இல்லை
ரணிலோ அல்லது கரு ஜயசூரியவோ ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினால் சஜித்திற்கு இந்த தைரியம் இருக்கமா என்பது சந்தேகமே.
மறு புறத்தில் சஜித்தை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால், தனக்கு ஆதரவான பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியில் இருந்து விலகி , ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் உடன்பாடு ஒன்றிற்கு வந்து வேறு ஒரு முன்னணியாக போட்டியிடப் போவதாக தகவல் வௌியாகியுள்ளது. என்றார்.

