வலி நிறைந்த இரத்தக்களரியான காலம் ஒன்று நாட்டினுள் மீண்டும் ஏற்பட இடமளிக்கப்படாது என மின்சக்தி, எரிசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் அபிவிருத்தி, 2019 ஆம் ஆண்டு மக்கள் ஆணையின் பின்னர் நூற்றுக்கு 500 ஆக அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்கும் போது, பொதுமக்கள் மிகவும் அழுத்தத்துடனும் , அச்சத்துடனும் வாழ்ந்து வந்தததாகவும், தற்போதைய அரசாங்கம் அதனை முழுவதுமாக போக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு நகரில் வீடற்ற மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 03 வீட்டத்திட்டங்களை பொதுமக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

