மங்கள பொறுப்பேற்க வேண்டும்-ரஞ்சன்

321 0

மதுபான அனுமதி பத்திரம் பெற்றுக் கொடுத்தமை தொடர்பில், அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்பேற்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு தெரியாமல் மதுபான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வழக்கு ஒன்றிற்காக நேற்று (16) நீதிமன்றம் வந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அதற்கு பதில் வழங்கிய போது இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் வௌிப்படுத்த தான் உறுதி அளிப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல், குறித்த அனுமதி பத்திரத்தில் உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

ஊழல் மோசடி செய்பவர்களை வௌிப்படுத்துவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.