ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி

766 0

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தியும், தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், யாழ்ப்­பா­ணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள் பூரண ஆரவை வழங்கியுள்ளனர்.

இதனால், யாழ் குடாநாட்டின் பிரதான நகரங்கள் அனைத்தும் செயலிழந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து இடம்பெறவில்லை.குடா நாட்டின் அனைத்துப் பகுதிகளும் மக்கள் நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பொது சந்தைகள் எதுவும் திறக்கப்படவில்லை.

அத்தோடு, பாடசாலைகள் வழக்கம் போல், கல்வி செயற்பாட்டுக்காக திறக்கப்படடுமென அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த போதும், மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ரனை இணைத் தலை­வ­ராக க்கொண்ட, தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்டில் இந்த எழுக தமிழ் பேரணி நடைபெறுகின்றது.அர­சியல் தீர்வு மற்றும் தாங்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை விரும்பும் தமிழ் மக்­களின் வலி­மையைக் காண்­பிக்கும் வகையில் இந்தப் பேரணி அமையும் என்று, தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலை­வ­ரான சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்திருந்தார்.இந்த எழுக தமிழ் பேர­ணியில் 35 இற்கு மேற்­பட்ட, அமைப்­புகள் மற்றும் கட்­சிகள் பங்­கேற்­கவுள்ளன.

யாழ்ப்­பா­ணத்தில் இன்று நடைபெறும் எழுக தமிழ் பேர­ணியில் பங்­கேற்க, வவு­னியா, அம்­பாறை, திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, மன்னார் ஆகிய இடங்­களில் இருந்து பொது­மக்­களை ஏற்றி வரு­வ­தற்­காக 35 இற்கும் அதி­க­மான பேருந்­துகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

15 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான மக்கள் இதில் பங்­கேற்­பார்கள் என்று எதிர்­பார்ப்­ப­தா­க, சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

தமிழர் தாய­கத்தில் சிங்­கள குடி­யேற்­றங்­களை நிறுத்து,  சிறி­லங்கா போர்க்­குற்­ற­வா­ளி­களை அனைத்­து­லக நீதி­மன்­றத்தில் நிறுத்து, எல்லா அர­சியல் கைதி­க­ளையும் விடு­தலை செய், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பாக பக்­க­சார்­பற்ற அனைத்­து­லக விசா­ர­ணையை நடத்து, தமிழ்ப் பகு­தி­களில் இரா­ணுவ மய­மாக்­கலை நிறுத்து, போரினால் இடம்­பெ­யர்ந்த அனை­வ­ரையும் சொந்த இடங்­களில் மீள்­கு­டி­ய­மர்த்து ஆகிய ஆறு பிர­தான கோரிக்­கை­களை முன்­வைத்து இந்த எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்று காலை நல்லூர் கந்­த­சு­வாமி ஆலய முன்­றிலில் இருந்தும், யாழ். பல்­க­லைக்­க­ழக வாயிலில் இருந்தும், இரண்டு இடங்­களில் இருந்து ஆரம்­பித்த பேரணி யாழ். கோட்டை அரு­கே­யுள்ள முற்­ற­வெளி திடலில் முடி­வ­டையும்.

அங்கு எழுக தமிழ் பிர­க­டனம் வாசிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­படும். அத்­துடன் பொது­அ­மைப்­பு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் பிர­மு­கர்கள் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இன்று நடை­பெ­றும் எழுக தமிழ் பேர­ணிக்கு, யாழ்ப்­பாண ஆசி­ரியர் சங்கம், யாழ். பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம், கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றியம், யாழ். பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்கம், உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­களும் இந்தப் பேர­ணிக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

அதே­வேளை, தமிழ் மக்கள் பேர­வை­யுடன் இணைந்து செயற்­படும் தமிழ் மக்கள் கூட்­டணி, ஈ.பி­.ஆ.ர்­எல்.எவ். ஆகிய கட்­சிகள் இந்தப் பேரணி ஒழுங்­க­மைப்பில் ஈடு­பட்­டுள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களில் ஒன்­றான ரெலோவும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. ஜன­நா­யக போரா­ளிகள் கட்­சியும் எழுக தமிழ் பேர­ணிக்கு ஆத­ரவு அளிப்­ப­தாக கூறி­யுள்­ளது.இத­னி­டையே எழுக தமிழ் பேர­ணியில் தமது கட்­சியின் பெயரோ, சின்­னமோ பயன்­ப­டுத்­தப்­ப­டாது என்றும், தமிழ் மக்­களின் நலன்­களை முன்­னி­றுத்­தியே இந்த பேரணி நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் தெரிவித்துள்ள சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் சார்பின்றி அனைவரும் இதில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டித்து போராட்டத்தை நடத்தி, இந்த நிகழ்வை வலுப்படுத்துமாறு தமிழ் மக்கள் பேரவை கோரியிருக்கிறது.