வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

300 0

தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11.10 மணியளவில்  டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொலிஸ் உத்தியோகத்தர் அவரது கடமை முடிந்த பின்பு கலேவெல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருக்கயிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.