குருணாகல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தொடர்ந்து போராடும் சாந்த பண்டார

324 0
வெற்றிடமாகி இருந்த குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தன்னை நியமிக்காமை தொடர்பில் கட்சியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

குருணாகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எச்.எம்.டி.பி. ​ஹேரத்தை நியமிக்க குருணாகல் மாவட்ட தேர்வுக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வௌியிடப்பட்டிருந்து.

எவ்வாறாயினும், குறித்த நியமனம் சட்டரீதியானது இல்லை என சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த சாந்த பண்டார, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்குடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலை தொடர்பில் கட்சியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அத தெரண செய்திச் சேவைக்கு அவர் தெரிவித்துள்ளார்.