மன்னாரில் தொடரும் எழுக தமிழ்-2019 பரப்புரை நடவடிக்கை!

48 0

தமிழ் மக்கள் பேரவையால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 தொடர்பான பரப்புரை நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட கள்ளியடி, இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம் மற்றும் மூன்றாம்பிட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்புகள் மூலம் இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று தன்னார்வமாக முன்வந்து இந்த பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை
05/09/2019.