தேசிய அடையாள அட்டை வௌியிடும் தென் மாகாண அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (06) திறந்து வைக்கப்படவுள்ளது.
காலி, சத்தர பிரதேச செயலக வளாகத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக தென் மாகாணம் போன்று ஏனைய மாகாண நபர்களுக்கும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பத்தேகம பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

