மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தை 6% வரை உயர்த்த நடவடிக்கை

356 0

2020 ஆம் ஆண்டுக்குள் வேறுப்பட்ட திறமைகளை கொண்டவர்களை இனம் கண்டு அவர்களின் வேலை வாய்ப்பு விகிதத்தை அதிகரிக்க உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

´எமது சமூகத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகள்´ என்ற தொனிப் பொருளில் நேற்று (05) யாழ். பொது நூலகத்தில் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றும் போதே வடக்கு ஆளுநர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பில் சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆளுநருக்கு விளக்கினார்.

மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து அறிந்துக் கொண்ட ஆளுநர், விடயத்திற்கு பொறுப்பான திணைக்கள பிரதானிகளுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த நிகழ்வில் ஆளுநர் பல தீர்வுகளை முன்வைத்ததுடன், மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு விகிதத்தை அடுத்த ஜனவரி முதல் 3 வீதம் முதல் 6 வீதம் வரை உயர்த்த எதிர்பாரப்பதாகவும் தெரிவித்துள்ளார்.