இலங்கைக்கு ஐ.நா.துணை நிற்கும்- உனா மெக்யூலி

497 0

new-pictureஇலங்கை தனது அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு, ஐ.நா இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் என்று, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உனா மெக்யூலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற 71ஆவது ஐக்கிய நாடுகள் சபை தினத்தை நினைவுகூரும் தேசிய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே உனா மெக்யூலி தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய உனா மெக்யூலி,

நாட்டிற்கு முன்னுரிமையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதில் இலங்கை மக்களுடன் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து பணியாற்றும்.

இவ்வாண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைத்துவமும் மாறியுள்ளது. புதிய திட்டங்களை ஆரம்பிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். ஒரே ஐக்கிய நாடுகள் சபை அணியென்ற வகையில் எவ்வாறு மிக நெருக்கமாக பணியாற்றலாம் என்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைத்துவமும் இவ்வாண்டு மாற்றடைந்துள்ளது. புதிய திட்டங்களை ஆரம்பிக்க நாம் திட்டமிட்டுள்ளோம். ஒரே ஐக்கிய நாடுகள் சபையின் குழு என்ற வகையில் எவ்வாறு நெருக்கமாக பணியாற்றலாம் என்பது குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

எமக்கு முன்னால் உள்ள உலகளாவிய இலக்குகளுடன், நாட்டுக்கு முன்னுரிமையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதில் இலங்கை மக்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். செழிப்பு மற்றும் நீடித்த சமாதானத்தை நோக்கி ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளோம் என்று மேலும் தெரிவித்தார்.