24 பேர் குளவி கொட்டுக்கிழக்காகி வைத்தியசாலையில் அனுமதி

446 0

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 24 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரம் தோட்டம் தலங்கந்தை பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,இவ்வாறு  குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் 05.09.2019 இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 18 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதில் 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆண்களும், 21 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.