தீர்ப்புக்கு எதிராக கஞ்சிப்பானை மேன்முறையீடு

322 0

டுபாயில் கைதுசெய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான கஞ்சிப்பானை இம்ரான் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.

5.3 கிலோகிரேம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஆறு வருட கடூழிய சிறைத் தண்டனையை வித்திருந்தது.

எனினும் இன்றைய தினம் சட்டத்தரணியூடாக கஞ்சிபானை இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.