வெளிநாட்டு மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது

336 0
இந்நாட்டில் விற்பனை செய்ய முடியாத 50 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மருந்து பொருட்களுடன் நபர் ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு, ஜயரத்ன வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரையும் மருந்து பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்கான தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.