புகையிரதத்துடன் மோதி இளைஞன் பலி

327 0

பேராதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதெனிய – பிலிமத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்துடன் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

நேற்று (01) இரவு 11.45 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்கஹவெலயில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியெ குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பிலிமத்தலாவ, ரணவக பகுதியை சேர்ந்த 23 வயதுடைய புத்திக பிரதீப் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் பேராதெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.