ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவு படுத்த எவராலும் இயலாது என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பிரிந்து சென்ற இரு கட்சிகளை இணைப்பது என்பது கடினமாக விடயம். பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எம்மை தூற்றுகின்றனர். நான் அவ்வாறு எவரையும் தூற்ற மாட்டேன். நான் உண்மையை பேசுவேன். உண்மையை பேசினால் தூற்றுகின்றனர். அதுதான் தற்போதைய நிலை. கடந்த தினங்களில் கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டோம். நாம் இரு கட்சிகளையும் இணைக்க முயற்சிக்கின்றோம்.
தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மணப்பெண்ணை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் திருமணம் முடிக்க முடியுமா?
நாங்கள் தொடர்ந்து இருப்போம். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை அடக்கம் செய்ய கிடைக்காது என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

