ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களை, அரசியல்வாதிகளின் தேவைக்காக பயன்படுத்துவதற்கு இடமளிக்க கூடாது என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி சங்கத்தின் முதலாவது மாநாடு அக்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடமபெற்றது.
தொடர்ந்து உரையாற்றிய அவர், சட்டத்தின் எண்ணக்கரு நாகரிக சமுதாயத்தின் அடித்தளம் என கூறினால் அது மிகையாகாது.
சட்டம் மற்றும் ஜனநாயகம் என்பன பொதுமக்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் பொதுமக்களின் இறையாண்மையை பாதுகாப்பதை விடுத்து அரசியல் தேவைக்காக பயன்படுத்துவதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

