தான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே செயற்பட்டதாகவும், அனைத்து கட்சிளும் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்பட வேண்டும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஹிரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளும் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியும் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தை நன்கு அறிந்த இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் பொருளாதாரம் ஒன்றை எதிர்வரும் 5 வருடங்களுக்கு கட்டியெழுப்ப வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

