யாழில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் குடிநீர் செயற்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

46 0

இலங்கையில் மழை நீரை சேகரித்து மேற்கொள்ளப்படும் பாரியளவிலான குடிநீர் வழங்கல்  திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடமராட்சியில் இடம்பெற்றது.

 

யாழ் மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக ஜனாதிபதியின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்காக இரண்டு பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டம் நீர்ப்பற்றாக்குறையினால் மிகுந்த சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் மாவட்டமாகும். இந்த பிரதேசத்தில் ஆறு அல்லது சிறிய மற்றும் பெரியளவிலான நீர்த்தேக்கங்கள் எதுவும் காணப்படுவதில்லை.

இந்நிலையிலேயே அங்கு குறித்த இத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.