கடும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

354 0

மலையக பகுதியில் கடும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.இந்நிலையில் மவுசாக்கலை நீர்தேக்கத்தின் நீர் கொள்ளளவு இன்று  காலை 8.30 மணிக்கு 14 அடி நீர் நிரம்ப வேண்டியுள்ளதாகவும் 27ஆம் திகதியன்று காலை 8.30 மணியிலிருந்து 28ஆம் திகதி காலை 8.30 காலப்பகுதியில் 2.5 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.கெனியோன்,லக்சபான,நவலக்சபான,பொல்பிட்டிய,விமலசுரேந்திர மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதன் கொள்ளவை எட்டியுள்ளது எனவும் அவர்  தெரிவித்தார்.