வெலே சுதா, கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் பூசா சிறைச்சாலைக்கு மாற்றம்

222 0

பாரிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள  சிறைக்கைதிகளை  பூசா சிறைச்சாலைக்கு  மாற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம்  தீர்மானித்துள்ளது.

போதைப்பொருள்  கடத்தலுடன்  தொடர்புடைய  மரணதண்டனை  கைதிகள்  மற்றும் திட்டமிட்ட குற்றசெயல்களை  புரிந்த  கைதிகளும்  இதில் அடங்குகின்றனர்

வெலே சுதா, கஞ்சிப்பானை  இம்ரான்  உள்ளிட்ட  கைதிகளே  இவ்வாறு  பூசா  சிறைச்சாலைக்கு  மாற்றப்படுள்ளதாக   சிறைச்சாலைகள்  ஆணையாளர்  நாயகம்  டீ.எம்.ஜே.டப்பள்யு.  தென்னகோன்  தெரிவித்தார்.

இந்த கைதிகள்  தடுத்துவைக்கப்பட்ட நிலையிலும்  பல்வேறு  கடத்தல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டு  வருகின்மை   தொடர்பில்  சந்தேகம் நிலவுகின்றது. மேலும்  சிறைச்சாலையின்  இடப்பற்றாக்குறையின்  நிமிதமே  அவர்கள்  பூசா சிறைச்சாலைக்கு  மாற்றப்பட்டவுள்ளனர்.

480  கைதிகளில்   சிலர்  பூசாசிறைச்சாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதுடன்,   ஏனையவர்களை  அங்கு  மாற்றும்  பணிகள்  கட்டம் கட்டமாக  இடம் பெறவுள்ளது.  இதில்  சிலருக்கு  பல  வழக்கு  விசாரணைகள்  காணப்படுவதனால்  அவர்களை  நீதிமன்றங்களில்   ஆஜர்ப்படுத்தும்  போது  அதற்கு  தேவையான  விசேட  பாதுகாப்பு  நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்படவுள்ளன.  அதற்காக  பொலிஸ் விசேட  அதிரடிப்படையினரின்  உதவி  பெறப்பட்டுள்ளது.