களனி பேருந்து நிலையத்திற்கு அருகில் கொலை

407 0
களனி பொலிஸ் பிரிவில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவர் தாக்கப்பட்டு இரத்தப்போக்கு காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் களனி பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பேருந்து ஒன்றின் நடத்துனர் எனவும், இவர் பொல்லால் தாக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய, களனி பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.