அவசரகால சட்டத்தை நாட்டில் நீக்கிய போதிலும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொம்பே பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ருவன் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்பு அற்றவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

