சுதந்திரக் கட்சி எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கும்-வீரகுமார திசாநாயக்க

197 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தெளிவான அரசியல் வேலைத் திட்டம் ஒன்று இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வீரகுமாரா திசாநாயக்க, சுதந்திரக் கட்சிக்கு தெளிவான ஒரு அரசியல் பாதையையும் தெளிவான அரசியல் நிலைப்பாடும் இருப்பதால் எப்போதும் அந்த கட்சி சரியான முடிவுகளை எடுப்பதாக கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமையை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர கட்சியின் மீது சிலர் குற்றம் சாட்டுவதில் நியாயம் இல்லை எனவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரிவினையை ஏற்படுத்துவது, அதே கட்சியில் உள்ளவர்கள் எனவும், ஆகவே இனி மேலும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்ளாமல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த வீரகுமார திசாநாயக்க, ´ஐக்கிய தேசியக் கட்சி என்ற புதையலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பாதுகாத்து வருகின்றார்.

எனவே, அவரிடம் இருந்து தலைமை பதவியை பெறுவதானால் பழி கொடுத்து ஐக்கிய தேசிய கட்சி என்ற புதையலை அவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும். அது அவர்களின் வேலை மாறாக அது எங்கள் பிரச்சினை அல்ல.

எனவே, ஐக்கிய தேசிய கட்சியினர் நோயுற்றவர்களுக்கு நல்ல மருந்து எது என்பதை அறிந்து செயற்பட வேண்டுமே தவிர சுதந்திர கட்சி மீது தேவையற்ற விதத்தில் குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை´ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.