அரசியலில் 71வருட காலம் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரு கட்சிகளினாலும் எவ்வித முன்னேற்றகரமான அரசியல் நிர்வாகமும் செயற்படுத்தப்படவில்லை. ஊழல் மோசடிகள் மிகுந்த இவ்விரு கட்சிகளின் போலியான வாக்குறுதிகளுக்கு நாட்டு மக்கள் இம்முறையும் ஏமாற கூடாது.
மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர கால மாற்றத்திற்கு அமைய புதுப்பிக்கப்பட கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அதுநிதி தெரிவித்தார்.
உத்தேச ஜனாதிபதி தேர்தல் மும்முனை போட்டியினை கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய தரப்பினருக்கு சவால் விடுக்கும் விதமாகவெ இம்முறை மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் 71வருட காலம முறையற்ற அரசியல் பின்னணியையே கொண்டுள்ளது.
தேர்தல் காலத்தில் இவ்விரு கட்சிகளும் ஒருவருக்கொருவரை தூற்றியே ஆட்சியமைத்துக் கொண்டுள்ளது. .
ஆகவே இவ்விரு தரப்பினரும் அரசியலில் இருந்து முழுமையான புறக்கணிக்கப்பட வேண்டும். புதிய ஒரு அரசியல் மார்க்கத்தை தெரிவு செய்ய வேண்டியது தற்போதைய தேவையாக காணப்படுகின்றது.
ஊழல் மோசடியாளர்களிடம் மீண்டும் மீண்டும் ஆட்சியதிகாரம் கிடைக்கப் பெற்றால் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது. உத்தேச ஜனாதிபதி தேர்தலில் முறைக்கேடான இவ்விரு தரப்பினருக்கும் நாட்டு மக்கள் தகுந்த அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

