பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

325 0

பரோல் காலத்தை நீட்டிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25-ம் தேதி பரோலில் வந்தார். பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்த நிலையில் நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால் மேலும் ஒரு மாதம் பரோல் கேட்டு உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு நளினி மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவை பரிசீலித்த சிறைத்துறை அதிகாரிகள் நளினியின் பரோலை நீட்டிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, பரோல் காலத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி இன்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.