வைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

275 0

போரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மிகவும் சோர்வாக இருப்பதாகவும் நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் படியும் அதன்பிறகு 15 நாட்கள் நன்றாக ஓய்வெடுக்கும் படியும் டாக்டர்கள் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.
வைகோ

ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் வைகோவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார்.

அப்போது மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.