மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

251 0

இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) அவரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அவர் ஓய்வு பெறுவதா என்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கியிருந்தார்.

இதேவேளைஇ புதிய இராணுவத் தளபதியாக யுத்தக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.