சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்தினாலை சந்திக்கின்றார் கோட்டா!

45 0

மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் கோட்டாபய, பௌத்த, சைவ, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று வருகின்றார்.

இந்தநிலையில் இதன் தொடர்ச்சியாகவே, இன்று மாலை கர்தினால் – கோட்டாபய சந்திப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து அரசாங்கத்தின் மீது கர்தினால் குற்றம் சுமத்திய விதம், அவர் மஹிந்த ஆதரவாளர் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் என்னை பார்க்க வர வேண்டாம், நான் யாரையும் சந்திக்க மாட்டேன் என சில வாரங்களின் முன்பாக கர்தினால் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.