சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த இருவர் கைது

335 0

புல்மோட்டை – கொக்கிலாய் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த சந்தேகநபர்கள் இருவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 152 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் புத்தளம் – சின்னப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் கொக்கிலாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.