நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தையே அறிவித்துள்ளேன் – கோட்டா!

598 0

நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தையே அறிவித்துள்ளேன் என மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராமவிற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஜயம் செய்து ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ என்னை வேட்பாளராக அறிவித்த போது நாட்டின் எதிர்காலம் பற்றியும் நடைமறைக்கு சாத்தியமான கொள்கைகளையும் குறிப்பிட்டிருந்தேன்.

அவை அனைத்தும் பிரயோசனமான வேலைத்திட்டங்களாகும். என்னை வரவேற்பதற்கு இங்கு வருகை தந்த உங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.