“தேர்தலில் போட்டியிடுவதா? ஆதரவளிப்பதா? – செப்டெம்பர் 3 ஆம் திகதி தீர்மானம்”

24 0

செப்டெம்பரில் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு குறித்து தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் அந்த மாநாட்டில் எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திர கட்சி எவ்வாறு செயற்படும் அல்லது யாருக்கு ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்று மாலை சுதந்திர கட்சி தலைமையகத்தில் கட்சி உறுப்பினர்கள் அனைவரதும் பங்குபற்றலுடன் இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை மாதாந்தம் இடம்பெறும் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பே இடம்பெற்றது. இதன் போது மாவட்ட, தொகுதி ரீதியாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், கட்சி செயற்பாடுகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது என்றார்.