இந்தியா மோசமாக ஆக்கிரமிப்பதாக இலங்கையிடம் முறையிட்ட பாகிஸ்தான்

26 0

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல்  கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ் மத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து  ஜம்மு மற்றும் காஷ் மீரில் இடம்பெற்றுவரும் அசா தாரண நிலைமை குறித்து  விளக்க மளித்தார்.

இச்சந்திப்பின் பொழுது உயர்ஸ்தானிகர் சர்வதேச ரீதியாக பிரச்சினைக்குரிய பிரதேசமாக அறியப்பட்ட ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு மாநில அந்தஸ்தினை மாற்றுவதற்கு இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்  தீர்மானங்களுக்கு எதிரானதாகும் எனவும்  சுட்டிக்காட்டினார்.

 

மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள் தொகையினை மாற்றியமைக்க இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச சட்டத்தினை மீறுவதாகும் எனவும் விளக்கமளித்தார்.

ஏழு தசாப்தங்கள் பழைமையான இப்பிரச்சினைக்கு அமைதியான முறையிலும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கேற்பவும் தீர்வினை மேற்கொள்ளுமாறு இந்திய அரசாங்கத்தினை பலதடவைகள் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு மற்றும்  நடவடிக்கைகள் பிராந்திய ஒத்துழைப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக காணப்படுகின்றது எனவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே பிராந்திய நாடுகளும் மற்றும் சர்வதேச சமூகமும் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்ற அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபடாதவாறு இந்திய அரசாங்கத்தினை தடுத்து நிறுத்த வேண்டும் என உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.