ரிதிமாளியத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லொக்கல்லா ஓய பிரதேசத்தில் இந்திய நாட்டவர் ஒருவர் சுமார் 20 அடி உயர கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தியா – பெங்களூரை சேர்ந்த ராமையா ரெட்டப்பா (55) என்ற பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் ஆலை ஒன்றில் சுமார் 20 அடி உயரத்தில் விசைப்பொறி உருளை ஒன்றை பொருத்திக் கொண்டிருந்த இந்த நபர் அதன் தகரம் ஒன்று கழன்றதில் கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அவர் மகியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் ரிதிமாளியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

