புதிய ஆளுநரின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மாத்திரமே

4715 18

central-bankநியமிக்கப்படவுள்ள புதிய ஆளுநர் ஒரு வருட பதவி காலத்திற்காக மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மத்திய வங்கி கட்டிடத்தில் தற்போது முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, மத்திய வங்கியின் பணியாளர்களுடன், ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல் நடத்துவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில், நாளையுடன் தமது பதவிக்காலம் நிறைவுறும் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் அர்ஜூன மகேந்திரனும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படுவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் அறிவித்திருந்தார்.
கிராந்துருகோட்டையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

Leave a comment