வலிகாமத்தில் குடிமனை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

430 0

kilinochchiயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளில் தமது குடிமனைகளை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பகுதியில் 63 ஏக்கர் காணி கடந்த வாரத்தில் விடுவிக்கப்பட்டது.
இதனை அடுத்து விடுவிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த மக்கள் தமது வீடுகளையும் காணிகளையும் பார்வையிடுவதற்காக நேற்று அங்கு கூடினர்.
எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் குடிமனைகளை தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 30 வீடுகள் இடிக்கப்பட்டு அத்திவாரங்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை அண்மித்திருந்த பொதுச் சந்தை கட்டிடத்தின் அடையாளங்களையும் காணமுடியவில்லை.
கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இருந்த பிள்ளையார் மற்றும் அம்மன் ஆலயங்களையும் காணவில்லை.
எனினும், ஆலயங்களுக்கு பின்புறமாக இருந்த வீரபத்திரர் ஆலயம் மாத்திரம் இடிபாடுகளுடன் காணப்படுகிறது.

Leave a comment