சஜித்துடன் போட்டி போடக் கூடிய வல்லமை கோத்தாவுக்கு இல்லை-அஜித்

276 0

ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சஜித் பிரேமதாசவுடன் போட்டி போடக் கூடிய வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இல்லை என அமைச்சர் அஜித் பெரோரா தெரிவித்தார்

மட்டக்களப்பு பொது நூலகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் நூலக திப்பு விழாவில் தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல்;உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பெரோரா இன்று செவ்வாய்க்கிழi (13)  கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

நான் இன்று மட்டக்களப்பில் அரசியல்வாதிகள், மக்களை சந்தித்தேன் அவர்களுக்கு என்ன விருப்பம் என தெரியவருகின்றது நான் எதிர்பார்க்கின்றேன் ஏழை மக்களுடைய ஏழ்மை தன்மையை விளங்கி கொள்ளக் கூடியவர் தான் இந்த நாட்டிற்கு பொருத்தமான தலைவராக வரவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

அந்த ஏழ்மைத்தன்மையில் இருந்து அபிவிருத்தி செய்யக் கூடியவராகவும் ஏழ்மை தன்மையை உணர்ந்தவராகவும் ஊழல்கள் மற்றும் குற்றங்களில் இருந்து  மீட்டெடுக்க கூடியவராகவும் தலைமைத்துவம் உடைய தலைவர் அமையவேண்டும். ஆகவே அது போல் ஒரு தலைவர் தேவைப்படுகின்றார்.

கொழும்பு நூலகத்திற்கு அடுத்ததாக மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுநூலகத்தை டிஜிற்றல் நூலகமாக திறந்துவைத்துள்ளோம். அவ்வாறே  நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் டிஜிற்றல் தொழில் நுட்பநூலக்தை திறப்போம்.

இன்று குழந்தைகள் இந்த தொழில் நுட்ப ரீதியான கல்வியைகற்றுக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருப்பதனால் இதனை செற்படுத்த கூடியவர். சஜித் பிரேமதாஸ இருக்கின்றார்

தெற்கில் உள்ள மக்கள் நாங்கள் நினைப்பதுபோல இந்த கிழக்கு மக்களும் அவ்வாறு நினைக்கின்றார்கள் என்பதை இன்று அறிய கூடியதாக இருக்கின்றது. சஜித் ஜனாதிபதியானால் இந்த நாட்டிற்கு நல்லதொரு காலம் பிறக்கும் என நினைக்கின்றேன்.

கோத்தபாயவிற்கு முழு நாடும் பயந்துள்ளது வரலாற்றில் கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவர் செயற்பட்டு கொண்ட செயற்பாடினால் அனைவரும் அவருக்கு பயந்தவர்களாக இருக்கின்றார்கள்.

இன்று இங்கு கூட சாதாரண தமிழ் மக்கள் கோதாபாயாவிடம் இருக்கின்ற பழய பயத்தை என்னிடம் தெரிவித்தனர்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிழைiயான ஒரு  ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாவை நியமித்து பிழைவிட்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சி ஒரு முரன்பாடற்ற ஜனநாயகப் பூர்வமான ஒரு தலைவரை முன்னிலைப்படுத்தினால் இதனை விட  போட்டி போட்டிருக்கலாம். கோத்தாபாயவுடன் இந்த போரில் சஜித் பிரேமதாஸ தமிழ் சிங்கள முஸ்லீம் அனைவரது வாக்குகளை பெற்று நாட்டிற்கு ஜனாதிபதியாக வரக் கூடிய திறமையானவர். வெற்றி பெறுவார்.

பிரதமர் ரணில், கருஜெயசூரியா, சஜித், ஆகிய மூன்று பேரும் தவைலவர்கள் அவர்கள் நாட்டை விரும்புகின்றவர்கள் அவர்களை வெளியில் அனுப்பு முடியாது. ஆனால்  ஒரு பக்கத்தில் இளைஞர்கள் தலைமைத்துவம் தேவை மறுபக்கத்தில். பழைய தலைவர்களும் தலைமைத்துவமும் இருக்கவேண்டும்.

முழு நாட்டையும் ஒன்றாக்கி பலப்படுத்த கூடிய ஒரு பலம் பெருந்தியவராக இருப்பவர் சஜித் பிரேமதாஸ எனவே ஜக்கிய தேசிய கட்சி  யாப்புக்கமைய செயற்குழு உத்தியோக பூர்வமாக கூடி  ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க முடிவெடுக்கவேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் முதலில் நீதிமன்ற தீர்பு முடிந்ததும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் என்றார் .