வடகிழக்கை இணைத்து விரைவில் தென்னை முக்கோண வலயம்- நவீன்

212 0

வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தென்னை செய்கையாளர்களிற்கான மானிய உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

வவுனியா மாவட்டத்தில் தெங்கு பயிர்செய்கையினை அதிகரிப்பதற்காக திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வருகின்றோம். வவுனியா மண் தென்னை செய்கைக்கு ஏற்றதாகவிருக்கிறது. எனவே நாம் எமது மாவட்ட காரியாலயம் ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராவிருக்கிறோம். அத்துடன் புத்தளம், குருநாகல் போல வடக்கு, கிழக்கை இணைத்து தென்னை முக்கோண வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு நாம் முயற்சி செய்து வருகின்றோம்.

இன்று விவசாயிகளது உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான அல்லது உயரிய விலை கிடைக்காமல் இருக்கிறது.தென்னை செய்கையிலும் நிலமை இதுவே. விவசாயியையும், சந்தையையும் எம்மால் இணைக்கமுடியாமல் இருக்கின்றமை துரதிஸ்டவசமே. அதனால் கூடுதலான சந்தர்பங்களில் இடைதரகர்களால் அதிகமான இலாபம் ஈட்டபடுகின்றது. எனவே நாம் இவ்விடத்தில் மாற்றம் செய்து நேரடியாகவே விவசாயிகளிற்கு அதிக இலாபம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன்படி வடக்கு கிழக்கு முழுவதும் எமது அலுவலகங்களில் தமிழ் உத்தியோகத்தர்களை நியமித்து நேரடியாகவே விவசாயிகளுடன் கலந்துரையாடி சந்தை வாய்ப்புகள் தொடர்பாக தெளிவுறுத்த உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.