கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

380 0
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடற்படையினருடன் இணைந்து காங்கேசன்துறை பகுதியில் சுமார் 80 கிலோ கேரள கஞ்சாவைக் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (12) காலை பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.