உடைந்து விழும் தறுவாயில் பாலம்

309 0

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் ,புளூம்பீல்ட்  தோட்ட குழந்தைகள் காப்பகம்  மற்றும் புளூம்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பாலம் உடைந்து விழும் தறுவாயில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக் காரணமாக குறித்த பகுதியில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதாகவும்,  குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகமாக இந்த பாதையை பயன்படுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பாடசாலை மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.